← அனைத்து அதிகாரங்கள்
பொருட்பால் • அதிகாரம் 83

கூடாநட்பு

குறள் 821–830

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 821 →

சீரிடம் காணின் எறிதற்குப் பட் டடை நேரா நிரந்தவர் நட்பு.

குறள் 822 →

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும்.

குறள் 823 →

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது.

குறள் 824 →

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும்.

குறள் 825 →

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று.

குறள் 826 →

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும்.

குறள் 827 →

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான்.

குறள் 828 →

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து.

குறள் 829 →

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லற் பாற்று.

குறள் 830 →

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல்.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →