← அனைத்து அதிகாரங்கள்
பொருட்பால் • அதிகாரம் 82

தீ நட்பு

குறள் 811–820

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 811 →

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது.

குறள் 812 →

உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என்?

குறள் 813 →

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர்.

குறள் 814 →

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை.

குறள் 815 →

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று.

குறள் 816 →

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும்.

குறள் 817 →

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும்.

குறள் 818 →

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல்.

குறள் 819 →

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு.

குறள் 820 →

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →