← அனைத்து அதிகாரங்கள்
பொருட்பால் • அதிகாரம் 84

பேதைமை

குறள் 831–840

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 831 →

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்.

குறள் 832 →

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல்.

குறள் 833 →

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்

குறள் 834 →

ஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்.

குறள் 835 →

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு.

குறள் 836 →

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின்.

குறள் 837 →

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை.

குறள் 838 →

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின்.

குறள் 839 →

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில்.

குறள் 840 →

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல்.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →