← அனைத்து அதிகாரங்கள்
பொருட்பால் • அதிகாரம் 77

படைமாட்சி

குறள் 761–770

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 761 →

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை.

குறள் 762 →

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது.

குறள் 763 →

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்.

குறள் 764 →

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை.

குறள் 765 →

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை.

குறள் 766 →

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு.

குறள் 767 →

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து.

குறள் 768 →

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும்.

குறள் 769 →

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை.

குறள் 770 →

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல்.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →