← அனைத்து அதிகாரங்கள்
பொருட்பால் • அதிகாரம் 78

படைச்செருக்கு

குறள் 771–780

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 771 →

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்நின்று கல்நின் றவர்.

குறள் 772 →

கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

குறள் 773 →

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு.

குறள் 774 →

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்.

குறள் 775 →

விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

குறள் 776 →

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து.

குறள் 777 →

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

குறள் 778 →

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும் சீர்குன்றல் இலர்.

குறள் 779 →

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர்.

குறள் 780 →

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →