← அனைத்து அதிகாரங்கள்
பொருட்பால் • அதிகாரம் 76

பொருள்செயல்வகை

குறள் 751–760

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 751 →

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்.

குறள் 752 →

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு.

குறள் 753 →

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று.

குறள் 754 →

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்.

குறள் 755 →

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல்.

குறள் 756 →

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்.

குறள் 757 →

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு.

குறள் 758 →

குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை.

குறள் 759 →

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்.

குறள் 760 →

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →