← அனைத்து அதிகாரங்கள்
பொருட்பால் • அதிகாரம் 69

தூது

குறள் 681–690

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 681 →

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

குறள் 682 →

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று.

குறள் 683 →

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு.

குறள் 684 →

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு.

குறள் 685 →

தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந் தூது.

குறள் 686 →

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்கது அறிவதாம் தூது.

குறள் 687 →

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து எண்ணி உரைப்பான் தலை.

குறள் 688 →

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு.

குறள் 689 →

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் வாய்சேரா வன்க ணவன்.

குறள் 690 →

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற் கு உறுதி பயப்பதாம் தூது.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →