← அனைத்து அதிகாரங்கள்
பொருட்பால் • அதிகாரம் 70

மன்னரைச் சேர்ந்தொழுதல்

குறள் 691–700

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 691 →

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

குறள் 692 →

மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கந் தரும்.

குறள் 693 →

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது.

குறள் 694 →

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து.

குறள் 695 →

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்கால் கேட்க மறை.

குறள் 696 →

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல்.

குறள் 697 →

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல்.

குறள் 698 →

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும்.

குறள் 699 →

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர்.

குறள் 700 →

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும்.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →