← அனைத்து அதிகாரங்கள்
பொருட்பால் • அதிகாரம் 68

வினைசெயல்வகை

குறள் 671–680

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 671 →

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது.

குறள் 672 →

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை.

குறள் 673 →

ஙல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல்.

குறள் 674 →

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும்.

குறள் 675 →

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல்.

குறள் 676 →

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல்.

குறள் 677 →

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல்.

குறள் 678 →

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று.

குறள் 679 →

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல்.

குறள் 680 →

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →