← அனைத்து அதிகாரங்கள்
பொருட்பால் • அதிகாரம் 67

வினைத்திட்பம்

குறள் 661–670

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 661 →

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற.

குறள் 662 →

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.

குறள் 663 →

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும்.

குறள் 664 →

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.

குறள் 665 →

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும்.

குறள் 666 →

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.

குறள் 667 →

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து.

குறள் 668 →

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல்.

குறள் 669 →

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை.

குறள் 670 →

எனைத்திட்பம் எய் தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →