← அனைத்து அதிகாரங்கள்
காமத்துப்பால் • அதிகாரம் 132

புலவி நுணுக்கம்

குறள் 1311–1320

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 1311 →

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு.

குறள் 1312 →

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து.

குறள் 1313 →

கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று.

குறள் 1314 →

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று.

குறள் 1315 →

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள்.

குறள் 1316 →

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள்.

குறள் 1317 →

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று.

குறள் 1318 →

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று.

குறள் 1319 →

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று.

குறள் 1320 →

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →