← அனைத்து அதிகாரங்கள்
காமத்துப்பால் • அதிகாரம் 131

புலவி

குறள் 1301–1310

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 1301 →

புல்லா திராஅப் புலத்தை அவர் உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது.

குறள் 1302 →

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்.

குறள் 1303 →

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல்.

குறள் 1304 →

ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று.

குறள் 1305 →

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை பூஅன்ன கண்ணார் அகத்து.

குறள் 1306 →

துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று.

குறள் 1307 →

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்று கொல் என்று.

குறள் 1308 →

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி.

குறள் 1309 →

நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது.

குறள் 1310 →

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →