← அனைத்து அதிகாரங்கள்
காமத்துப்பால் • அதிகாரம் 130

நெஞ்சொடுபுலத்தல்

குறள் 1291–1300

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 1291 →

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது.

குறள் 1292 →

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

குறள் 1293 →

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங்கு அவர்பின் செலல்.

குறள் 1294 →

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

குறள் 1295 →

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

குறள் 1296 →

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததென் நெஞ்சு.

குறள் 1297 →

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் மாணா மடநெஞ்சிற் பட்டு.

குறள் 1298 →

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

குறள் 1299 →

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி.

குறள் 1300 →

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய நெஞ்சம் தமரல் வழி.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →