← அனைத்து அதிகாரங்கள்
காமத்துப்பால் • அதிகாரம் 133

ஊடலுவகை

குறள் 1321–1330

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 1321 →

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு.

குறள் 1322 →

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும்.

குறள் 1323 →

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து.

குறள் 1324 →

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை.

குறள் 1325 →

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து.

குறள் 1326 →

உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது.

குறள் 1327 →

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும்.

குறள் 1328 →

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு.

குறள் 1329 →

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா.

குறள் 1330 →

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்.

← முந்தைய அதிகாரம்