← அனைத்து அதிகாரங்கள்
காமத்துப்பால் • அதிகாரம் 111

புணர்ச்சிமகிழ்தல்

குறள் 1101–1110

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 1101 →

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள.

குறள் 1102 →

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து.

குறள் 1103 →

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு.

குறள் 1104 →

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள்?

குறள் 1105 →

வேட் ட பொழுதின் அவையவை போலுமே தோட் டார் கதுப்பினாள் தோள்.

குறள் 1106 →

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள்.

குறள் 1107 →

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு.

குறள் 1108 →

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு.

குறள் 1109 →

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன்.

குறள் 1110 →

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →