← அனைத்து அதிகாரங்கள்
காமத்துப்பால் • அதிகாரம் 112

நலம்புனைந்துரைத்தல்

குறள் 1111–1120

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 1111 →

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள்.

குறள் 1112 →

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று.

குறள் 1113 →

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

குறள் 1114 →

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று.

குறள் 1115 →

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு நல்ல படாஅ பறை.

குறள் 1116 →

மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன்.

குறள் 1117 →

அறுவாய் நிறைந்த அவிர்மதி க்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து.

குறள் 1118 →

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி.

குறள் 1119 →

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி.

குறள் 1120 →

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →