← அனைத்து அதிகாரங்கள்
காமத்துப்பால் • அதிகாரம் 110

குறிப்பறிதல்

குறள் 1091–1100

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 1091 →

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

குறள் 1092 →

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது.

குறள் 1093 →

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர்.

குறள் 1094 →

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்.

குறள் 1095 →

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும்

குறள் 1096 →

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும்.

குறள் 1097 →

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

குறள் 1098 →

அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும்.

குறள் 1099 →

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள.

குறள் 1100 →

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →