← அனைத்து அதிகாரங்கள்
பொருட்பால் • அதிகாரம் 99

சான்றாண்மை

குறள் 981–990

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 981 →

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

குறள் 982 →

குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று.

குறள் 983 →

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண்.

குறள் 984 →

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு.

குறள் 985 →

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை.

குறள் 986 →

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல்.

குறள் 987 →

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு.

குறள் 988 →

இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மை உண் டாகப் பெறின்.

குறள் 989 →

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்.

குறள் 990 →

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →