← அனைத்து அதிகாரங்கள்
பொருட்பால் • அதிகாரம் 98

பெருமை

குறள் 971–980

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 971 →

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதிறந்து வாழ்தும் எனல்.

குறள் 972 →

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.

குறள் 973 →

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்.

குறள் 974 →

ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.

குறள் 975 →

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்.

குறள் 976 →

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு.

குறள் 977 →

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் சீரல் லவர்கண் படின்.

குறள் 978 →

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து.

குறள் 979 →

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்.

குறள் 980 →

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும்.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →