← அனைத்து அதிகாரங்கள்
பொருட்பால் • அதிகாரம் 61

மடியின்மை

குறள் 601–610

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 601 →

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும்.

குறள் 602 →

மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர்.

குறள் 603 →

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியும் தன்னினும் முந்து.

குறள் 604 →

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு.

குறள் 605 →

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்.

குறள் 606 →

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது.

குறள் 607 →

இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர்.

குறள் 608 →

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும்.

குறள் 609 →

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும்.

குறள் 610 →

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →