← அனைத்து அதிகாரங்கள்
பொருட்பால் • அதிகாரம் 60

ஊக்கமுடைமை

குறள் 591–600

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 591 →

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார் உடையது உடையரோ மற்று.

குறள் 592 →

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்.

குறள் 593 →

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார்.

குறள் 594 →

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை.

குறள் 595 →

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு.

குறள் 596 →

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

குறள் 597 →

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு.

குறள் 598 →

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னுஞ் செருக்கு.

குறள் 599 →

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெருஉம் புலிதாக் குறின்.

குறள் 600 →

உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார் மரம்மக்க ளாதலே வேறு.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →