← அனைத்து அதிகாரங்கள்
காமத்துப்பால் • அதிகாரம் 123

பொழுதுகண்டிரங்கல்

குறள் 1221–1230

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 1221 →

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது.

குறள் 1222 →

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை.

குறள் 1223 →

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் துன்பம் வளர வரும்.

குறள் 1224 →

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும்.

குறள் 1225 →

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை?

குறள் 1226 →

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்த திலேன்.

குறள் 1227 →

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய்.

குறள் 1228 →

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை.

குறள் 1229 →

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து.

குறள் 1230 →

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர்.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →