← அனைத்து அதிகாரங்கள்
காமத்துப்பால் • அதிகாரம் 122

கனவுநிலையுரைத்தல்

குறள் 1211–1220

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 1211 →

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து.

குறள் 1212 →

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன் மன்.

குறள் 1213 →

நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர்.

குறள் 1214 →

கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு.

குறள் 1215 →

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது.

குறள் 1216 →

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால் காதலர் நீங்கலர் மன்.

குறள் 1217 →

நனவினால் நல்காக் கொடியார் கனவனால் என்எம்மைப் பீழிப் பது.

குறள் 1218 →

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

குறள் 1219 →

நனவினால் நல்காரை நோவர் கனவினால் காதலர்க் காணா தவர்.

குறள் 1220 →

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்வூ ரவர்.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →