← அனைத்து அதிகாரங்கள்
பொருட்பால் • அதிகாரம் 96

குடிமை

குறள் 951–960

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 951 →

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு.

குறள் 952 →

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார்.

குறள் 953 →

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகையென்ப வாய்மைக் குடிக்கு.

குறள் 954 →

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்.

குறள் 955 →

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று.

குறள் 956 →

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்தும் என் பார்.

குறள் 957 →

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

குறள் 958 →

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்.

குறள் 959 →

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

குறள் 960 →

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →