← அனைத்து அதிகாரங்கள்
பொருட்பால் • அதிகாரம் 94

சூது

குறள் 931–940

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 931 →

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.

குறள் 932 →

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

குறள் 933 →

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும்.

குறள் 934 →

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன்று இல்.

குறள் 935 →

கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார்.

குறள் 936 →

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் முகடியான் மூடப்பட் டார்.

குறள் 937 →

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்.

குறள் 938 →

பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது.

குறள் 939 →

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் அடையாவாம் ஆயங் கொளின்.

குறள் 940 →

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர்.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →