← அனைத்து அதிகாரங்கள்
பொருட்பால் • அதிகாரம் 89

உட்பகை

குறள் 881–890

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 881 →

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின்.

குறள் 882 →

வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு.

குறள் 883 →

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும்.

குறள் 884 →

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா ஏதம் பலவும் தரும்.

குறள் 885 →

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவும் தரும்.

குறள் 886 →

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது.

குறள் 887 →

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி.

குறள் 888 →

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி.

குறள் 889 →

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாங் கேடு.

குறள் 890 →

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →