← அனைத்து அதிகாரங்கள்
பொருட்பால் • அதிகாரம் 86

இகல்

குறள் 851–860

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 851 →

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய்.

குறள் 852 →

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை.

குறள் 853 →

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும்.

குறள் 854 →

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங் கெடின்.

குறள் 855 →

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிக்லூக்கும் தன்மை யவர்.

குறள் 856 →

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து.

குறள் 857 →

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர்.

குறள் 858 →

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.

குறள் 859 →

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு.

குறள் 860 →

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →