← அனைத்து அதிகாரங்கள்
பொருட்பால் • அதிகாரம் 80

நட்பாராய்தல்

குறள் 791–800

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 791 →

நாடாது நட் டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு.

குறள் 792 →

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும்.

குறள் 793 →

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு.

குறள் 794 →

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

குறள் 795 →

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.

குறள் 796 →

கேட்டினும் உண்டோ ர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்.

குறள் 797 →

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல்.

குறள் 798 →

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

குறள் 799 →

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளஞ் சுடும்.

குறள் 800 →

மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →