← அனைத்து அதிகாரங்கள்
காமத்துப்பால் • அதிகாரம் 126

நிறையழிதல்

குறள் 1251–1260

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 1251 →

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

குறள் 1252 →

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில்.

குறள் 1253 →

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும்.

குறள் 1254 →

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் மறையிறந்து மன்று படும்.

குறள் 1255 →

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று.

குறள் 1256 →

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர்.

குறள் 1257 →

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் பேணியார் பெட்ப செயின்.

குறள் 1258 →

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை.

குறள் 1259 →

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ் சம் கலத்தல் உறுவது கண்டு.

குறள் 1260 →

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →