← அனைத்து அதிகாரங்கள்
காமத்துப்பால் • அதிகாரம் 120

தனிப்படர்மிகுதி

குறள் 1191–1200

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 1191 →

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி.

குறள் 1192 →

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளி க்கும் அளி.

குறள் 1193 →

வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே வாழுநம் என்னும் செருக்கு.

குறள் 1194 →

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின்.

குறள் 1195 →

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் கடை.

குறள் 1196 →

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது.

குறள் 1197 →

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான்.

குறள் 1198 →

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல்.

குறள் 1199 →

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு.

குறள் 1200 →

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →