← அனைத்து அதிகாரங்கள்
காமத்துப்பால் • அதிகாரம் 118

கண்விதுப்பழிதல்

குறள் 1171–1180

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 1171 →

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது.

குறள் 1172 →

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழப்பது எவன்?

குறள் 1173 →

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்க துடைத்து.

குறள் 1174 →

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து.

குறள் 1175 →

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் காமநோய் செய்தஎன் கண்.

குறள் 1176 →

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது.

குறள் 1177 →

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து வேண்டி அவர்க்கண்ட கண்.

குறள் 1178 →

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணாது அமைவில கண்.

குறள் 1179 →

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண்.

குறள் 1180 →

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →