← அனைத்து அதிகாரங்கள்
பொருட்பால் • அதிகாரம் 103

குடிசெயல்வகை

குறள் 1021–1030

இந்த அதிகாரத்திற்கான இசைப்பாடல் வெளியிடப்பட்டபின் இங்கே காணலாம்.

இந்த அதிகாரத்தின் 10 குறள்கள்

குறள் 1021 →

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல்.

குறள் 1022 →

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி.

குறள் 1023 →

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்.

குறள் 1024 →

சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு.

குறள் 1025 →

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு.

குறள் 1026 →

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

குறள் 1027 →

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை.

குறள் 1028 →

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும்.

குறள் 1029 →

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பான் உடம்பு.

குறள் 1030 →

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி.

← முந்தைய அதிகாரம்அடுத்த அதிகாரம் →